Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை ஏமாற்றிய ஹெச்2பி விசா மோசடி அம்பலம்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2010 (14:25 IST)
அமெரிக்காவில் தற்காலிக பணிகளுக்காக அயல் நாடுகளில் இருந்து பணியாளர்களை கொண்டுவர அளிக்கப்படும் ஹெச் 2பி விசாவைப் பயன்படுத்தி 87 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டதை அந்நாட்டு அரசு அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசு அமைப்பான பணியாளர்கள் பொறுப்பு அலுவலகம் ( Government Accountability Office - GAO) இந்த விசா மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. ஹெச் 2பி விசா என்பது குடியேற்ற உரிமை அற்ற, தற்காலிகமாக ஒரு காலகட்டத்திற்கு மட்டும் அமெரிக்காவிற்கு வந்து விவசாயம் அல்லாத துறைகளில் பணியாற்ற அளிக்கப்படும் அனுமதியாகும்.

இந்த விசாவைப் பயன்படுத்தி 87 இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை பெற்றுத் தருவதாக உறுதிமொழி அளித்து, ஒவ்வொருவரிடமும் 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பெற்றுக்கொண்டு லளெசியானாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் மோசடி செய்ததுள்ளது.

ஆனால் அவ்வாறு அழைத்துவரப்பட்ட ஒருவருக்கும் அமெரிக்காவில் அந்நிறுவனம் வேலை பெற்றுத் தரவில்லை. இதனை கண்டுபிடித்துள்ள அமெரிக்க அரசு அமைப்பு, அமெரிக்காவில் செயல்படும் பல அமைப்புகள் இந்த ஹெச் 2பி விசாவைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன என்று கூறியுள்ளது.

ஹெச் 2பி விசாவில் அயல் நாடுகளில் இருந்து பணியாளர்களை அழைத்துவந்த 10 நிறுவனங்களின் விவரங்களை ஆய்வு உட்படுத்தியபோது, அதில் 8 நிறுவனங்கள் விசா கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை பணியாளர்களிடம் வசூலித்துள்ளதையும், அமெரிக்க உள்நாட்டுச் சட்டத்தின்படி அவர்களுக்கு குறைந்த பட்ச நாள் ஊதியத்தை வழங்காமல் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

இவ்வாறு அழைத்துவரும் பணியாளர்களுக்கு அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய அளவில் பாதிதான் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு விரிவான அறிக்கை தந்துள்ளது.

87 இந்தியர்களை பணிக்காக அழைத்துவந்த லளெசியானா நிறுவனம் 1.8 மில்லியன் டாலர் அவர்களிடம் மோசடி செய்துள்ளதாகவும், அவர்களில் பலரை மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை காட்டி அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியர்களையும், இதர அயல் நாட்டவர்களையும் இவ்வாறு மோசடி செய்து அழைத்துவந்த நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments