Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடை‌நிலை ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி : சா‌ன்‌றித‌ழ் ச‌ரிபா‌ர்‌‌ப்பு

Webdunia
செவ்வாய், 19 மே 2009 (12:25 IST)
அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் கா‌லியாக உ‌ள்ள 5,773 இடை நிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதைத் தொடர்ந்து 30 ஆயிரம் பே‌ர்க‌ளி‌ன் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 28-ந் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் மாநில ப‌திவு மூ‌ப்ப ு அடிப்படையில் இடை நிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு ஒரு பணிக்கு 5 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 27 ஆயிரத்து 912 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

10 ஆயிரம் பேர்களுக்கு அனுப்பியாகிவிட்டது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் கடிதம் அனுப்பப்பட்டு 28-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்கள் ஆகியோர் ஈடுபட உள்ளனர். ஜுன் மாதம் 5-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறுகிறது.

ஒரு பணிக்கு 5 பேர் ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்றால் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே அரசு பணியில் இருக்கலாம். சிலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலைபார்க்கலாம். இத்தகைய காரணங்களால் அவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வராமல் போகலாம். இதன் காரணமாகத்தான் ஒரு பணிக்கு 5 பேர் அழைக்கப்படுகிறார்கள். மேலும் ப‌திவு மூ‌ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தான் பணி நியமனம் நடைபெறும்.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பி.ஏ.ராமையா, உறுப்பினர் செயலாளர் ஆர்.கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments