Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்ட்ரேலிய நிரந்தர குடியிருப்பு பட்டியலில் மாற்றம், இந்தியர்களுக்கு பாதிப்பு!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (14:26 IST)
ஆஸ்ட்ரேலிய நாட்டிற்குச் செல்லும் அயல்நாட்டவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பணியாற்றிய பின்னர் பெறும் நிரந்தர குடியிருப்பு விசா பட்டியலில் செய்துள்ள ஒரு மாற்றம் அந்நாட்டிற்குப் பணியாற்றச் சென்றுள்ள இந்தியர்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் நாட்டின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்ற உள்நாட்டில் போதுமான பணியாளர்கள் கிடைக்காத நிலையில், அப்படிப்பட்ட பணிகளுக்கு வரும் அயல்நாட்டினரை ஒரு காலகட்டத்திற்குப் பிறகு - ஒரு தேர்வை வைத்து - தங்கள் நாட்டில் நிரந்தரமாக குடியிருந்து பணியாற்றும் வாய்ப்பை (விசா அனுமதியை) ஆஸ்ட்ரேலிய அரசு வழங்கி வருகிறது.

அப்படிப்பட்ட பணிகளின் பட்டியலில் சமூக நலனும் ஒன்றாக இருந்தது. இத்துறையில் பணியாற்றிட - குறிப்பாக செவிலியர்கள் பணிக்கு - இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் ஆஸ்ட்ரேலியா சென்று குடியேறி பணியாற்றி பிறகு நிரந்தர குடியிருப்பு ( Permanent Residency) வசதியை பெற்றுள்ளனர ். இந்த நிலையில் நிரந்தர குடியிருப்பு விசா வழங்கல் பட்டியலில் இருந்து சமூக நலன் ( Community Welfare) துறையை ஆஸ்ட்ரேலிய அரசு நீக்கியுள்ளது.

இதனால் அங்கு செவிலியர்களாக பணியாற்றிவரும் பலருக்கு நிரந்தரக் குடியிருப்பு விசா கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments