Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி.யில் மாணவர்கள் மீது தாக்குதல்: இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது சீனா

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (14:10 IST)
ஆஸ்ட்ரேலியாவில் பயிலும் அயல்நாட்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை தடுக்குமாறு இந்தியாவுடன் இணைந்து சீனாவும் குரலெழுப்பியுள்ளது. அயல்நாட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆஸ்ட்ரேலியா அரசை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட ்’ பத்திரிகைக்கு ஆஸ்ட்ரேலியாவுக்கான சீன தூதர் லியு ஜின் அளித்துள்ள பேட்டியில ், ஆஸ்ட்ரேலியாவில் தங்கியுள்ள தங்கள் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திட சீன அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியாவில் 1,30,000க்கும் அதிகமான சீன மாணவர்கள் தங்கி பயின்று வருவதாகவும ், ஆனால் சமீப காலமாக தங்கள் நாட்டு மாணவர்கள் மீதும் ஒரு சில தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

எந்தெந்த இடங்களில் சீன மாணவர்கள் தாக்கப்பட்டனர் என்ற விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்ட லியூ ஜின ், ஆஸ்ட்ரேலியாவில் பயின்று வரும் சீனா மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது நியாயமான உரிமைகளை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை ஆஸ்ட்ரேலிய அரசு மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments