Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ அலுவலர் காலி பணியிட‌ங்களு‌க்கான கலந்தாய்வு

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (10:22 IST)
மருத்துவ அலுவலர் காலி பணியிடங்களை நிரப்புவதற்க ான கல‌ந்தா‌‌ய்வு சென்னையில் ஜனவ‌ரி 29, 30, 31- ந் தேதிகளில் நடக்கிறது.

இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில ், தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ அலுவலர் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. மருத்துவர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய 15.10.08 முதல் 20.10.08 வரையிலும், 26.11.08 முதல் 28.11.08 வரைலும் 22.12.08 மற்றும் 23.12.08 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்று 853 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

தற்போதுள்ள மருத்துவ அலுவலர் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் (ஜனவரி) 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நல பயிற்சி மையத்தில் நேர்காணல்-கலந்தாய்வு நடத்தப்பட உள் ளது. கல‌ந்தா‌ய்‌வி‌ல் ப‌ங்கு பெற வே‌ண்டியவ‌ர்களு‌க்கு அழை‌ப்பு‌க் கடித‌ங்களு‌ம் அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌வி‌ட்டன எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments