Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக்கழகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி

Webdunia
மதுரை காமரா‌ஜ் ப‌ல்கலை‌க்கழ‌ம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி தர முடிவு செய்யப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் நே‌ற்று கேள்வி நேரத்தின்போது, ச‌ட்ட‌ப்பேரவை உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன் கே‌ள்‌வி‌க்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பதி‌லி‌ல், த‌மிழகத்தில் 2006ல் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்காக பயிற்சி மையம் அமைக்கக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, அண்ணா மேலாண்மை மையத்தின் மூலம் அண்ணா நகரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.
ஆண்டுக்கு ரூ.60 லட்சம் செலவு என்ற வகையில் இந்த மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஆண்டுக்கு ரூ.62 லட்சத்து 30 ஆயிரம் செலவாகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால், இந்த ஆண்டு 6,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி தர முடிவு செய்யப்பட்டது.

அந்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேசி ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் ரூ.10 லட்சம் வழங்க முடிவானது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான பயிற்சிகளை தர, தனியார் முன்வந்தால் அவர்களை அரசு ஊக்குவிக்கும். மதுரையில் இந்த பயிற்சியை இந்தாண்டே தொடங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த 3 பல்கலைக்கழகங்களிலும் பயிற்சியை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார்கள் என்று பார்த்துவிட்டு படிப்படியாக மற்ற பல்கலைக்கழகங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments