Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தற்காலிக ஊழியர்களு‌க்கு துறை ஒது‌க்‌கீடு

தற்காலிக ஊழியர்களு‌க்கு துறை ஒது‌க்‌கீடு
சிறப்பு தகுதித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது. தேர்வுபெற்றவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலகத்திடமிருந்து தகவல் தெரிவிக்கப்படும்.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டபோது, அரசு‌ப் ப‌ணிகளை கவ‌னி‌க்க 11,000 பே‌ர் த‌ற்கா‌லிக ஊ‌‌ழிய‌ர்களாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

தலைமைச் செயலகத்தில் உதவியாளர்களாகவும், மாவட்ட அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாகவும் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

த‌ற்போது தற்காலிக பணியாளர்களை சிறப்பு தகுதித்தேர்வு நடத்தி படிப்படியாக பணிநிரந்தரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 4,103 பேரை பணிநிரந்தரம் செய்ய டி.என்.பி.எஸ்.சி. மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

அதில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் அரசு துறைகளில் மேலும் 1,484 காலி இடங்கள் ஏற்பட்டதால் அவற்றையும் சேர்த்து மொத்தமாக 5,587 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது.

ஏற்கனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, முதலில் அறிவிக்கப்பட்ட 4,103 காலி இடங்களுக்கு அதிகமாகவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்திருந்தனர். விண்ணப்பதாரர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு, விருப்ப முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் துறை ஒதுக்கீடு செய்யும் பணி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணி ஒருவாரத்திற்குள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்வுபெற்றோர் பட்டியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். ஒதுக்கீடு செய்யப்பட்ட துறையிடமிருந்து தேர்வுபெற்றவர்களுக்கு தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள தற்காலிக ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் தொடரலாம். அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அனைவரும் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil