Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு வழிகாட்ட‌ல்

கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு வழிகாட்ட‌ல்
, புதன், 8 ஏப்ரல் 2009 (12:35 IST)
கல்லூரி விரிவுரையாளர் தேர்வு எழுதுபவ‌ர்களு‌க்கு முதல் தாளுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்பு திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

பல்கலைக்கழக மானியக்குழு, இளநிலை ஆய்வு உதவித் தொகை பெறுவதற்கு மற்றும் கல்லூரி விரிவுரையாளர் பணிக்காக தகுதி பெறுவதற்கான தேர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேர்வுகள் நடத்துகிறது.

இந்த தேர்வு வரு‌ம் ஜுன் மாதம் 28-ந் தேதி நட‌க்‌கிறது. கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தாங்கள் தேர்வு எழுதும் பல்கலைக்கழக ப‌‌திவாளரு‌க்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி 4.5.2009.

இந்த தேர்வு எழுதுபவர்கள் 3 தாள்கள் எழுதவேண்டும். இந்த தாள்களில் அனைத்து முதுகலை பட்டதாரிகளுக்கும் பொதுவாக உள்ள முதல்தாளுக்கான வழிகாட்டும் வகுப்புகளை மட்டும் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தின் சார்பு அமைப்பான சிவந்தி அகாடமி, நடத்துகிறது.

சிவந்தி அகாடமி இந்தத் தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் வழிகாட்டும் வகுப்புகளை வருகின்ற 25-ந் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக 25-ந் தேதி முதல் மே மாதம் 6-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும். பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.1,200. இதில் தகுதி உள்ள முதுகலை பட்டதாரிகள் மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் ஆண்கள், ஆதித்தனார் கல்லூரி விடுதியிலும், பெண்கள் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி விடுதியிலும் தங்க அனுமதிக்கப்படுவார்கள். நாள் ஒன்றுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி கட்டணம். ரூ.60 ஆகும். விடுதிக்கான பன்னிரண்டு நாட்கள் கட்டணம் ரூ.720, பயிற்சி வகுப்பு முதல் நாள் 25.4.09 அன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பப் படிவம் எழுதி தங்கள் முகவரியை தெளிவாக பின்கோடுடனும், தொலைபேசி எண்ணையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் ரூ.1,200 க்கான வரைவோலை (டிமாண்ட் டிராஃப்ட்) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம், -628216, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் 18.4.2009 ஆகும்.

கனரா வங்கி, ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கிக‌ளி‌லம‌ட்டு‌ம் வரைவோலை எடு‌க்க வே‌ண்டு‌ம்.

இந்த பயிற்சி வகுப்புகள் சம்பந்தமாக மேலும் விவரம் பெற விரும்புவோர் சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் எப்.லடிஸ்லாஸ் ரொட்ரிகோ எம்.ஏ. எம்.,பில் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04639 - 242998.

Share this Story:

Follow Webdunia tamil