Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு... தெறிக்க விடும் பாஜக!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:30 IST)
அங்காங்கே பாஜக வெற்றிகளை சுவைத்து வரும் நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 
 
அங்காங்கே பாஜக வெற்றிகளை சுவைத்து வரும் நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த முறை தேர்தலில் தனித்து போட்டியிட்டுள்ள பாஜக சொற்ப இடங்களில் வெற்றி பெற்றாலும் இதனை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். 
 
கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பாஜகவை பலரும் கிண்டலும் அடித்து வருகின்றனர். பவானிசாகர் பேரூராட்சியில் 4வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு தொகுதியில் ஒரே ஒரு மட்டுமே கிடைத்தது. அதுவும் அவர் போட்ட ஓட்டு என்று தெரிய வருகிறது. 
 
பாஜக வேட்பாளரின் ஓட்டை தவிர அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் உறவினர்களும் கூட அவருக்கு வாக்களிக்க வில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை பதிவிட்டு ஒத்த ஓட்டு பாஜக என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments