Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மோடி பிரதமராக முடியாது, வேண்டுமானால் காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கலாம்'

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2014 (14:42 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணி ஷங்கர் அய்யர், மோடி பிரதமராக முடியாது, வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்க ஏற்பாடு செய்கிறோமென கூறியுள்ளார். மேலும், இத்தகைய கருத்து தெரிவித்ததற்கு தான் மன்னிப்பும் கேட்கபோவதில்லை எனவும் கூறி இருக்கிறார்
FILE

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தனது இளமை காலத்தில் டீ விற்றதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கேலி செய்தனர்.

FILE
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணி ஷங்கர் அய்யர், மோடி குறித்து பேசிய போது,' 21 ஆம் நூற்றாண்டில் மோடி கண்டிப்பாக பிரதமராக முடியாது. டீ விற்க வேண்டுமானால் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஏற்பாடு செய்கிறேன்' என்றார்.

இது மோடியின் தனிப்பட்ட விஷயம் சார்ந்தது என கூறியதற்கு பதிலளித்த 72 வயதான மணி ஷங்கர் அய்யர், யார் முதலில் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசியது? மோடி ராகுல் காந்தியை இளவரசர் என அழைப்பது தனிப்பட்ட விஷயமில்லையா? என கூறிய அவர் தன மோடியி டீ விற்க அழைத்தற்காக மன்னிப்பு கேட்கபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments