Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியைச் சந்திக்கவில்லை: சரத் பவார்

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:39 IST)
FILE
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ரகசியமாகச் சந்தித்ததாக வந்துள்ள செய்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மறுத்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் கடந்த 10 ஆண்டு காலமாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கூட்டணி மத்திய அரசிலும் நீடிக்கிறது. சரத் பவார் மத்திய விவசாயத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் நரேந்திர மோடியும், சரத் பவாரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் தனியாக சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தன.

கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி மலருவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமையலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு குறித்து பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்குக் கூட தெரியவில்லை.

இந்நிலையில், மோடியை சந்தித்ததாக வந்த செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். மோடியைச் சந்தித்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது என்று கூறிய அவர், மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பார்ப்பதோடு சரி என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் 48 மக்களவை இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

Show comments