Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று அணி உருவாக்கம்

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2014 (15:04 IST)
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகள் இனைந்து மாற்று அணி உருவாக்கப்பட்டு, இக்கட்சிகளின் சார்பில் ஐந்து அம்ச பிரகடனமும் வாசிக்கப்பட்டது.
FILE

தற்போது ஒன்றிணைந்துள்ள இக்கட்சிகளின் புதிய அணி, தற்போது நாட்டில் ஆட்சிபுரியும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு ஒரு மாற்றாக அமையுமென தெரிவிக்கபட்டுள்ளது.

FILE
இந்த 11 கட்சிகளின் சார்பில் அந்தந்த கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், இக்கட்சிகளின் சார்பில் ஐந்து அம்ச பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

அப்போது பேசிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் கரத், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு அதிக அளவில் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், பாஜக வின் கொள்கைகளுக்கும், காங்கிரசின் கொள்கைகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லையெனவும், எனவே தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அணி இக்கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகம்! எக்ஸ்டன்ஷன் வசதியும் உண்டு..!

கருத்து கணிப்புகளை பொய்யாக்கி 3-வது முறை ஆட்சி அமைக்கும் பாஜக.. மீண்டும் முதல்வராகும் நயாப் சிங் சைனி..

ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு..!

இன்று காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

Show comments