Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடியை காப்பியடித்த ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2014 (14:31 IST)
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவை பெற வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 2011 ஆம் ஆண்டு உபயோகித்தது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
FILE

மூன்று வருடங்களுக்கு முன் நரேந்திர மோடி குஜராத்திலுள்ள மெஹ்சானா நகரில் "நான் அல்ல, நாம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பிரச்சாரம் செய்தார்.

அதே முழக்கத்தை முன் வைத்து தற்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
FILE

காங்கிரஸ் துணை தலைவரான ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டும் விதமாக இந்த விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது. இந்த விளம்பரத்தில் சோனியாவோ, மன்மோகன் சிங்கோ இடம் பெறவில்லை. இத்தகைய விளம்பரத்தில் மோடி உபயோகித்த அதே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மோடியின் முழக்கத்தை காங்கிரஸ் கட்சி காப்பியடித்துவிட்டதாக செய்தி வெளியானதை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, யாருடைய முழக்கத்தையும் தங்கள் கட்சி பயன்படுத்தாது என்றும், தங்கள் முழக்கமே வேறு எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments