Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் - மம்தா பானர்ஜி

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2014 (15:53 IST)
மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் எனவும் மோடிக்கு ஆதரவு அளிக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
FILE

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்..


FILE
அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் ஆதரவு அளிப்பேன் எனவும், நாங்கள் மூவரும் சேர்ந்து நாட்டுக்காக உழைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி அதன் நம்பகத்தன்மை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, மதவாதத்திற்கு ஆதரவு தர முடியாது எனவும், ராகுல் காந்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'என்னால் தனிப்பட்ட நபரை பற்றி பேசமுடியாது, கட்சியை பற்றி கேளுங்கள் எனவும் பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments