Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காந்தி பெயரை போலியாகப் பயன்படுத்தும் சோனியா காந்தி

காந்தி பெயரை போலியாகப் பயன்படுத்தும் சோனியா காந்தி
, சனி, 22 பிப்ரவரி 2014 (18:27 IST)
''காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலும், ‘காந்தி’ என்ற பெயரை போலியாக வைத்து கொண்டுள்ளனர்'' என்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
FILE

கர்நாடக மாநிலம், தாவண்கெரேவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி பேசியதாவது-

'நாடாளுமன்றத்தில், ஊழலுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேறாததற்கு, பா.ஜ.க. தான் காரணம்' என, காங்கிரசார் சொல்லி திரிகின்றனர். நாடாளுமன்றத்தில், காங்கிரஸ், எம்,பி.,க்கள் தான் அமளியில் ஈடுபடுகின்றனர். இதை மக்கள் அறிந்துள்ளனர்.

மக்களின் கண்களை தூசியால் மறைத்து வந்த காங்கிரஸ், இப்போது, 'பெப்பர் ஸ்பிரே' என்ற மிளகு பொடி தூவி மறைக்க பார்க்கிறது. காங்., கட்சி தான், அனைத்து ஊழல்களுக்கும் மூலகாரணம். ஊழலும், காங்கிரசும், இரட்டை சகோதரிகள். காங்கிரசை ஆட்சியில் இருந்து நீக்கினால் தான் ஊழலை ஒழிக்க முடியும். காங்கிரஸ் ஒரு தொற்று நோய் போன்றது; நாடு முழுவதும் பரவி, நாட்டை அழித்துவிட்டது. நாட்டின் அதிகாரம், ஒரே குடும்பத்தில் முடங்கிக் கிடக்கிறது.

webdunia
FILE

மகாத்மா காந்தி தலைவராக இருந்தபோது காங்கிரஸ் பல்வேறு சித்தாந்தங்களை கொண்டிருந்தது. ஆனால், இந்த போலி காந்திகள் வந்தவுடன் காங்கிரஸ் கொள்கைகள் அற்ற கட்சியாகி விட்டது. ஆட்சி, அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நாட்டு மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று விட்டது. பெண்களை முன்னேற்றாமல் இந்தியா, 'சூப்பர் பவர்' ஆகமுடியாது என்று ராகுல் கூறியுள்ளார். முதலில், அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கட்டும். பெண்கள் மேம்பாட்டில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால், குறைந்தபட்சம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தட்டும்.

ஐ.மு.கூட்டணி ஆட்சி, இரண்டாவது முறையாக வந்த போது, 100 நாளில், விலைவாசியை குறைப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் நடக்கவில்லை. கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் ஓட்டு சேகரிக்க வந்த சோனியாவும், ராகுலும், பற்றி எரியும் அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு செல்ல நேரம் இல்லை. தெலுங்கானா பிரச்னையை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் தான், காங்., கட்சி பயன்படுத்தி வருகிறது.” என்று மோடி பேசினார்.

இந்த கூட்டத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பங்கேற்றார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பா.ஜ.க.விலிருந்து, விலகி புதுக்கட்சி துவக்கிய எடியூரப்பா, சமீபத்தில் தான் பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil