Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் கட்சி ஏழைகளை கேலி செய்வதாக மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சி ஏழைகளை கேலி செய்வதாக மோடி பேச்சு
, சனி, 25 ஜனவரி 2014 (15:50 IST)
உத்தர பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோடி, ஆளும் காங்கிரஸ் கட்சி ஏழைகளை கேலி செய்வதாகவும், ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
FILE

கோரக்பூரில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் கூட்டத்தில் பேசிய அவர், தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், ஏழைகளை கேலி செய்து வருகிறது.

டீ விற்றவர் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக இருப்பதை அக்கட்சி ஏற்க மறுக்கிறது. ஏழைகளின் வளர்ச்சியை காங்கிரஸ் விரும்பவில்லை, காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் வறுமை நிலை உயர்ந்து வருகிறது.
webdunia
FILE

தேர்தலின்போது மட்டும் ஏழைகளை பற்றி காங்கிரஸ் கவலைப்படும். பின்னர் அது தொடர்பான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாது. இந்த நாடு ஏழ்மையான நாடு இல்லை. முறையான ஆட்சி அமையாததால் இந்த நிலையில் உள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தனது கனவான 'காங்கிரஸ்-ப்ரீ இந்தியா' என்பது நடைமுறையில் நிறைவேறுமென மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil