Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக 200 இடங்களுக்கு மேல் பெறும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

பாஜக 200 இடங்களுக்கு மேல் பெறும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
, சனி, 25 ஜனவரி 2014 (15:55 IST)
பாஜக வரும் 2014 பொதுத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்று இந்தியா டுடே குழுமம் எடுத்துள்ள கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. மோடி அலையால் தாக்கம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
FILE

இந்தக் கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் கூட்டணி தற்போதைய இடங்களில் இருந்து சுமார் 150 இடங்கள் வரை குறைவாகப் பெற்று, 100 இடங்கள் வரை பெறக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மேலும், ஐ.மு.கூட்டணி, தே.ஜ.கூட்டணி அல்லாத மூன்றாவது அணி, சுயேட்சைகளுக்கு அதிக ஆதரவு கிட்டும் என்றும் அவை 220 இடங்கள் வரை பெறக்கூடும் என்றும் தெரிகிறது.

இதில் தெரியவந்த சில சுவாரஸ்யமான அம்சங்கள்...

காங்கிரஸ் தெலங்கானா பகுதியில் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ஆனால் தென்னகத்தில் படு தோல்வியைத் தழுவும்.

மோடி அலை, பீகாரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

திரிணமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் பெரு வெற்றி பெறும்.

மோடி அலையால் மேற்கு இந்தியப் பகுதியில் 85 சதவீத இடங்களை தே.ஜ.கூட்டணி பெறும்.

மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி, தற்போதைய ஐ.,மு.கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றும்...

- இவ்வாறு இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

2010க்குப் பின்னர் 200 இடங்கள் என்ற அளவை தே.ஜ.கூட்டணி தாண்டக்கூடும் என்றும் தெரியவருகிறது. தே.ஜ.கூட்டணிக்கு 34 சதவீதம் வாக்கும், ஐ.மு.கூட்டணிக்கு 23 சதவீதமும், மற்ற கட்சிகள் 43 சதவீத வாக்குகளும் பெறும் என்று தெரிகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil