Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் சாராத பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பயிற்சி

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (16:35 IST)
தமிழக அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து பட்டதாரி இளைஞர்களுக்காக வங்கித் துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் (BFSI) சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்குகின்றன. இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
இப்பயிற்சி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாகப் பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
இப்பயிற்சித் திட்டத்தில் பங்கு பெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத் திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் பெறுவர்.
 
2013-2014ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் www.ictact.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஆர் மலை என்றால் மோடி..? இருவரையும் ஒப்பிடுவதா? - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு 18% ஜிஎஸ்டி - கார் வாங்குபவர்களை பாதிக்குமா?

இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை குறித்து சு வெங்கடேசன்..!

வங்கியில் இருந்த வந்த வாட்ஸ் அப் மெசேஜ்.. அடுத்த நிமிடமே 7 லட்ச ரூபாய் காலி..!

ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!

Show comments