TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (16:50 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் வரும் அக்டோபரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள துணை ஆட்சியர ், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர ், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்டப் பதிவாளர் (பதிவுத்துறை) உள்ளிட்ட பதவிகளுக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 88 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வை 45,000க்கும் அதிகமானோர் எழுதினர். தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தகுதி பெற்ற 888 பேர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 3, 4ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments