Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPSC குரூப்-1 தே‌ர்வு: மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கல்வியக மாணவர்கள் சாதனை!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2010 (20:57 IST)
TNPSC குரூப ்-1 முதல்நிலைத் தேர்வில் சைதை சா.துரைசாமியின் மனித நேயம் ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் மாணவர்கள் 207 தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முதன்மைத் தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் அனுப்பியுள்ள செய்தி அறிக்கை வருமாறு:

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் பல்வேறுபட்ட உயர்நிலை பதவிகளுக்கான ( IAS, IPS/Group-1) பயிற்சியினை சைதை சா.துரைசாமியின் மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வியகத்தால் மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசால் நடத்தப்படும் இந்திய குடிமைப்பணி தேர்வில் நேர்முகத் தேர்வு வரை சென்று பணி கிடைக்காத எமது மையத்தின் மாணவர்களும், TNPSC குரூப்-1 தேர்வில் தேர்ச்சி அடைந்து, துணை ஆட்சியர் பணி அல்லாமல், DSP, AD, D.R., DRCS, CTO, DEO, DFO போன்ற பதவிகளில் பணியாற்றும் எமது மைய மாணவர்களும், TNPSC குரூப்-2 தேர்வில் வெற்றியடைந்து, மாநில அரசுப் பணியில் நியமனம் செய்யப்பட்ட மாணவர்களும் மற்றும் மேற்கண்ட தேர்வுகள் எதிலும் வெற்றி பெறாமல் இந்தத் தேர்வில் கலந்து கொண்டவர்களுமாக பங்கேற்ற மாணவர்களில் 207 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

எங்களது மையத்தில் பயின்ற அனைத்து மாணவர்களும், சாதி, மத பேதமின்றி, எந்தவித பாகுபாடும் இல்லாமல், இலவச பயிற்சி வகுப்புகள், தங்குமிடம், உணவு, பாடப் புத்தகங்கள், மாதிரித் தேர்வுகள், யோகா பயிற்சி வகுப்புகள், போக்குவரத்து வசதிகள் ஆகிய அனைத்தும் மனிதநேய அறக்கட்டளை சார்பாக முற்றிலும் இலவசமாக செய்து தரப்படுகிறது.

இந்த முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள எங்கள் கல்வியக மாணவர்களுக்கும், எங்கள் கல்வியகத்தில் பயிலாமல் சுயமாக படித்து தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்குமான முதன்மைத் தேர்வு ( MAINS) பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற புதிய மாணவ, மாணவியர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்கட்ட தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

அவ்வாறு முதன்மைத் தேர்வில் பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும், தொடர்ந்து நேர்முகத் தேர்வு வரை முழுமையான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும், அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும் என இம்மையத்தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம்.ராஜேஸ்வரன் தெரிவிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:
சைதை சா.துரைசாமியின்
மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வியகம்
எண்:28, முதல் பிரதானன சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை 600 035
தொலைபேசி: 044-24358373, 9840106162, 9677028707, 9003375622.
இணையதளம்: www.saidais.com, மின் அஞ்சல்: manidhaneyam@yahoo.co m
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

Show comments