Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

MCA கலந்தாய்வு 19இல் துவக்கம்

MCA கலந்தாய்வு 19இல் துவக்கம்
சென்னை , புதன், 15 ஜூலை 2009 (11:40 IST)
எம்.சி.ஏ. (MCA) படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி துவங்கும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வி.கு.ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 19ஆம் தேதி துவங்கும் கலந்தாய்வு, 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

30இல் MBA கலந்தாய்வு: இதேபோல் MBA படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு அதே கல்லூரியில் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான ரேங்க் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை ஆகியவற்றின் விவரங்கள் gct.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil