Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

MBBS சேர்க்கை கட்டண நடைமுறையில் மாற்றம்

MBBS சேர்க்கை கட்டண நடைமுறையில் மாற்றம்
சென்னை , செவ்வாய், 16 ஜூன் 2009 (11:25 IST)
அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ். (MBBS) இடத்தை மாணவர்கள் வீணாக்காமல் இருக்கும் வகையில் இந்தாண்டு சேர்க்கைக் (அட்மிஷன்) கட்டண நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கலந்தாய்வுக்கு வரும்போது ‘பிராஸஸிங்’ கட்டணம் ரூ.500 உட்பட மொத்தம் ரூ.2,500க்கு மட்டுமே டி.டி. எடுத்து வந்தனர். இதனால் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கலந்து கொண்டு விட்டு, முன் கட்டணத் தொகையைப் பற்றிக் கவலைப்படாமல் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்ந்து வந்தனர். இவ்வாறு காலியாகும் இடங்கள், இறுதியில் அதே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்தன.

ஆனால், இந்தாண்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு கலந்து கொள்ள வரும்போதே, மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணமாக ரூ.8,500க்கு டி.டி.-யும், பிராஸஸிஙகட்டணமாக ரூ.500க்கு டி.டி.யும் எடுத்து வர வேண்டும்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராமல், பொறியியல் உள்ளிட்ட வேறு படிப்பை அந்த மாணவர் தேர்வு செய்யும் நிலையில் மேலே குறிப்பிட்ட ரூ.8,500 டி.டி. தொகை மற்றும் ரூ.500 டி.டி. தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 251 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

மேலே குறிப்பிட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு வரும் போது ரூ.25,000க்கு (கடந்த ஆண்டு வரை இது ரூ.5 ஆயிரமாக இருந்தது.) டி.டி. எடுத்து வர வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, கல்விக் கட்டணத் தொகையில் ரூ.25,000 கழித்துக் கொள்ளப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரே சீரான கட்டண நடைமுறையை அமல்படுத்த எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் போது ரூ.8,500 டி.டி. வாங்க முடிவு செய்யப்பட்டது.

மாணவர்கள் குறிப்பிட்ட கல்லூரியில் சேர்ந்தவுடன், மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து இந்தக் கட்டணம் தொடர்புடைய கல்லூரிக்கு அனுப்பப்படுமஎன்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

Share this Story:

Follow Webdunia tamil