Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MBBS படிப்பில் சேர 11,364 மாணவர்கள் விண்ணப்பம்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2009 (16:44 IST)
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். ( MBB S) படிப்பில் சேர இதுவரை மொத்தம் 11,364 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இப்படிப்புக்கான விண்ணப்பத்தைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் நாளை (ஜூன் 17) கடைசி நாளாகும்.

சென்ன ை, செங்கல்பட்ட ு, திருச்ச ி, மதுர ை, சேலம ், கோவை உட்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ். இடங்களில் உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 இடங்களும ், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு 3 இடங்களும ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 3 இடங்களும ், பாதுகாப்புப் படை வீரர் வாரிசுகளுக்கு 2 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் உள்ளன.

இதில் உடல் ஊனமுற்றோர் உட்பட சிறப்புப் பிரிவினருக்கு உரிய 45 இடங்களுக்கு இதுவரை 250 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு உரிய 3 இடங்களுக்கு 64 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி தரவரிசைப் (ரேங்க்) பட்டியல் வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வரும் ஜூலை 6ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments