Webdunia - Bharat's app for daily news and videos

Install App

B.Ed. தேர்வு முடிவுகளில் குளறுபடி: தேர்வு எழுதிய மாணவர்கள் அவதி

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (17:06 IST)
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களில் சில மாணவர்களின் தேர்வு முடிவில் அவர்கள் பரீட்சை எழுதவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் 5 கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் கடந்த மே மாதம் நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளைப் பார்த்த மாணவ, மாணவிகளில் பலர் அதிர்ச்சியடைந்தனர். தேர்வு எழுதிய பாடங்களில் “ஆப்சென்ட ் ” என தேர்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததே இதற்கு காரணம்.

இதுதொடர்பாக தேர்வு மையங்களில் மாணவிகள் கேட்ட போது தேர்வுகள் அனைத்தும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்பட்டது. அவர்கள்தான் இதற்கு பொறுப்பு என்றனர்.

இதனால் சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிலை இம்மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments