Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011 முதல் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: கபில் சிபல்

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2009 (18:21 IST)
சி.பி.எஸ்.இ. முறையில் கல்வி கற்பிக்கப்படும் பள்ளிகளில் வரும் 2011ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தும் முறை ரத்து செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளித் தேர்வுகளில் நடைமுறையில் உள்ள மதிப்பெண் மூலம் மதிப்பீடு செய்யும் திட்டம் ஒழிக்கப்பட்டு, வரும் 2009-10ஆம் கல்வியாண்டு முதல் கிரேடு மூலம் மாணவர்களின் திறனை மதிப்பிடும் முறை அமல்படுத்தப்படும் என்றார்.

மாணவர்கள் விரும்பினால் மட்டுமே 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் முற ை, வரும் 2010-11ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்த கபில் சிபல், எனினும் 10ஆம் வகுப்புக்கு பின்னர் பள்ளி மாற விரும்பும் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதியாக வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

Show comments