+ 2 தேர்ச்சி பெறாதவர்கள் மறுதேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2013 (14:12 IST)
FILE
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு உரிய நேரத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 'தட்கல்' திட்டத்தின் கீழ் ஜூன் 6, 7 தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்தத் திட்டத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட நாட்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.85ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000ம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட சலான் மூலம் தேர்வுக் கட்டணத்தை ஜூன் 8 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் Confirmation copy என்பதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் மீண்டும் ஒரு புகைப்படத்தை ஒட்டி, அதன்மீது விண்ணப்பதாரர்கள் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.

அந்த விண்ணப்பதோடு, தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலான், மதிப்பெண் சான்றிதழ் நகல், ரூ.40க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

இந்த ஆவணங்களோடு கூடிய விண்ணப்பத்தை ஜூன் 14, 15 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

Show comments