‌மகளிருக்கான இந்திரா காந்தி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (15:19 IST)
ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு இந்திரா காந்தி கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் வழங்கப்படுகிறது.

முதுநிலை பட்டப்படிப்பில் (தொழிற்படிப்பு நீங்கலாக) சேரும் மாணவிகள் இந்த கல்வி உதவித் தொகை பெறத் தகுதியானவர்கள். எனினும் தொலைநிலைக் கல்வி மூலம் முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் இந்தக் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.

நாடு முழுவதும் 1,200 மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன் படி மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 20 மாதங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இந்த கல்வி உதவித் தொகை பெறும் மாணவிகள் பிற உதவித்தொகை பெறவும் தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்பப்படிவங்களை ugc.ac.in/notices/igsgc_0910.htm l என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் ( Downloa d) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Mr. Satish Ahuja, Under Secretary (SA-III), University Grants Commission, Bahadurshah Zafar Marg, New Delhi-110002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா?

பாமகவில் இருந்து விலக தயார்: ஜி.கே. மணி பரபரப்பு அறிவிப்பு!

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய NRI: 100 கோடி சொத்து இருக்குது.. ஆனாலும் புலம்பல் ஏன்?

மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடியா? அநியாயம் பண்றாங்கய்யா..!

திருமணமான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள அரசியல்வாதி.. கடும் கண்டனங்கள்..!

Show comments