ஹா‌ர்வர்ட் ஆசியாவிற்கு வராது: நித்தின் நோரியா

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2010 (14:33 IST)
அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தியாவிற்கு வரவேற்க மத்திய அரசு தயாராகிவிட்ட நிலையில், உலகின் முன்னணி வணிகப் பள்ளியான ஹா‌ர்வர்ட், ஆசியாவில் தங்களுடைய பள்ளியின் கிளைகள் திறக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அறிவித்துள்ளது.

ஹா‌ர்வர்ட் வணிகப் பள்ளியின் ( Harvard Business School) தலைவராக இந்தியாவில் படித்துத் தேர்ந்த நித்தின் நோரியா பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அப்பால் பிறந்த, கல்வி கற்ற ஒருவர் ஹாவர்ட் வணிகப் பள்ளியின் தலைவராவது இதுவே முதல் முறையாகும். நித்தின் நோரியா மும்பை ஐஐடியிலும், பிறகு எம்ஐடியிலும் கற்றவர்.

இவர் ஹாங்காங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹா‌ர்வர்ட் வணிகப் பள்ளியின் கிளையை ஆசியாவில் திறக்கும் திட்டமேதுமில்லை என்று கூறியுள்ளார்.

“ஆசியாவில் பள்ளியின் கிளையைத் திறக்கும் அவசியம் ஏதுமிருப்பதாக நாங்கள் கருதவில்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை. நாங்கள் அறிவை நோக்கித்தான் ஒடுகிறோமே தவிர, தேவையை நோக்கியல்ல. ஆசியாவைப் பொறுத்தவரை ஒரு சில ஆய்வு மையங்களைத் திறந்து கால் பதிக்கும் எண்ணம் மட்டுமே உள்ளத ு” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments