முனைவர் பட்டம் பெறாதவர்களுக்கும் ஐ.ஐ.டி.யில் விரிவுரையாளர் பணி

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (13:32 IST)
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் முனைவர் ( P h.D) பட்டம் பெறாதவர்களும் விரிவுரையாளர்களாகப் பணியாற்றலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் சிறந்து விளங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி. விளங்குகிறது. தற்போது ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்களில் முனைவர் பட்டம் பெறாதவர்களே இல்லை எனக் கூறும் நிலை உள்ளது. விதிவிலக்காக கடந்த 1970க்கு முன்னர் பேராசிரியராக சேர்ந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே முனைவர் பட்டம் பெறாதவர்கள்.

இந்நிலையில், பேராசிரியர் பற்றாக்குறை காரணமாக முனைவர் பட்டம் பெறாதவர்களும் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றலாம் என்ற புதிய அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஐ.ஐ.டி.யில் விரிவுரையாளர்களுக்கென 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் ஒருவரிடம் கேட்ட போது, முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி.யில் பணியாற்ற முடியும் என்ற விதிமுறையை தளர்த்தும் விதமாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு உள்ளது. முனைவர் பட்டம் பெறாதவர்களை விரிவுரையாளர்களாக பணியமர்த்துவது விருப்பத்திற்கு ( optiona l) உட்பட்டது என்று கூறப்பட்டாலும், இது குழப்பத்தையே ஏற்படுத்தும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments