முதுநிலை மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2009 (16:41 IST)
ஜனவரி 10ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் தினம் என்பதால் அன்றைய தினத்தில் நடத்துவதாக அறிவித்த முதுநிலை மருத்துவக் கல்விக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் விடுத்துள்ள செய்தியில், “வரும் ஜனவரி 10ஆம் தேதி நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக முகாம்கள் நடத்தப்படும். அன்றைய தினம் நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளதால், முகாம்களில் சேவையாற்று மாணவ, மாணவிகள் அதனை எழுத முடியாமல் போகும்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இத்தேவை வேறொரு தேதிக்கு தள்ளி வைத்திட வேண்டும் என மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும ் ” எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments