Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதற்கட்ட கலந்தாய்வு: 3 பொறியியல் பாடப்பிரிவுக்கு மாணவர்கள் ‘நோ’

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2009 (17:13 IST)
பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட மாணவர் கலந்தாய்வு நாளை நிறைவடைய உள்ள நிலையில், சுற்றுச்சூழல், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி படிப்பை ஒரு மாணவர் கூட இதுவரை தேர்வு செய்யவில்லை.

இந்தாண்டு பொறியியல் படிப்பில் மொத்தம் 1.5 லட்சம் அரசு இடங்கள் உள்ளன. இவற்றில் சேருவதற்கான முதற்கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 10ஆம் தேதி துவங்கியது.

ஜூலை 28ஆம் தேதி நிலவரப்படி, அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள ், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் 41,623 இடங்கள் நிரம்பியுள்ளன.

முதற்ட்ட கலந்தாய்விற்கு 28ஆம் தேதி வரை 53,898 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 22% மாணவர்கள் (12,105 பேர்) வரவில்லை. 167 பேர் கலந்தாய்வில் பங்கேற்றும் பொறியியல் இடத்தைத் தேர்வு செய்யவில்லை. இரு மாணவர்களின் விண்ணப்பங்கள் கலந்தாய்வில் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையில், சுற்றுச்சூழல் பொறியியலில் 37 இடங்கள ், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸில் 47 இடங்கள ், டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரியில் 19 இடங்கள் ஆகியவற்றில் ஒரு இடத்தைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments