Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 300 இடங்கள்

Webdunia
திங்கள், 16 பிப்ரவரி 2009 (12:08 IST)
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கூடுதலாக 300 இடங்களை சேர்க்க த‌‌மிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் கூறினார்.

ஈரோட்டில் செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 9,000 இடங்களில் 'வரும்முன் காப்போம்’ முகாம்கள் நடத்தப்பட்டன. மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால் இத்திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே பணிபுரிய விரும்புகின்றனர். இந்தக் குறைபாட்டைப் போக்க, முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கென கூடுதலாக 300 இடங்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கு 1500 இடங்கள் மட்டுமே உள்ளன. எம ். ப ி. ப ி. எஸ் முடித்த 120 மரு‌த்துவ‌ர்கள ை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை மயக்கவியல் மருத்துவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா ஒரு ஆம்புலன்ஸ் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 150 ஒன்றியங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது எ‌ன்ற ு சுப்புராஜ் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments