மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் 25இல் இரண்டா‌ம் கட்ட கல‌ந்தா‌ய்வு

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2009 (12:17 IST)
மரு‌த்துவப் படி‌ப்புகளு‌க்கான 2ஆ‌ம் க‌ட்ட கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி துவங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்தக் கலந்தாய்வு செ‌ப்ட‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தியுட‌ன் முடிவடை‌கிறது.

மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான முதற்கட்ட கல‌ந்தா‌ய்வு கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடந்ததது.

இதில் இடஒதுக்கீடு பெற்றவர்களில் 1,398 பேர் MBB S படிப்பில் சேர்ந்தனர். 15 பேர் சேரவில்லை. பல் மருத்துவத்தில் சேர இடஒதுக்கீடு பெற்றவர்களில் 277 பேர் சேர்ந்தனர். 5 பேர் சேரவில்லை. இதையடுத்து 758 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலி இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட க‌ல‌‌ந்தா‌ய்வு வரு‌ம் 25ஆம் தேதி துவங்குகிறது. இந்தக் கல‌ந்தா‌ய்‌வின் போது த‌ர்மபுரி மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால ், அந்த இடங்களில் மாணவர் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

Show comments