Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு: ஜூலை 5இல் கலந்தாய்வு

Webdunia
வியாழன், 25 ஜூன் 2009 (11:30 IST)
பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதி தொடங்க உள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்கள ், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை சேர்த்து சுமார் 85 ஆயிரம் இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், கணிதம ், இயற்பியல ், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 11 மணிக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கே.கணேசன ், துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் ஆகியோர் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments