Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 துணை தேர்வு: தட்கல் முறை‌யி‌ல் ‌வி‌ண்ண‌‌ப்‌பி‌க்க 12ஆ‌ம் தே‌தி கடை‌சி நா‌ள்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2009 (13:00 IST)
பிள‌ஸ ் 2 தே‌ர்வு‌க்க ு ' த‌ ட ்க‌ல ் முறை‌'யி‌ல ் விண்ணப்பிக்க வரு‌ம ் 12 ஆ‌ம ் தே‌த ி கடை‌ச ி நா‌ள ் என‌்று‌ அரச ு தே‌ர்வுக‌ள ் இய‌க்க‌கம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுதொ‌ட‌ர்பா க அரசு தேர்வுகள் இயக்க க‌ ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செய்திக்குறிப்பில ், பிளஸ் 2 தேர்வில் தவறிய மாணவ, மாணவிகளுக்கு ஜூன், ஜூலையில் துணை தேர்வு நடக்கிறது. கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள், 'தட்கல் முற ை' யின் கீழ் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பிக்கலாம்.

மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 'தட்கல் முற ை' யில் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு பாடத்துக்கு ரூ.85 மற்றும் ரூ.1000. இரண்டு பாடங்களுக்கு ரூ.135 மற்றும் ரூ.1000, மூன்று பாடங்களுக்கு ரூ.185 மற்றும் ரூ.1000 என கட்டணம். கட்டணத்தை 'அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6' என்ற பெயருக்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.

ஏற்கனவே கட்டணம் செலுத்தி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தனித்தேர்வர்கள், சிறப்பு கட்டணமாக ரூ.1,000 மட்டும் டிடி எடுத்து அனுப்பினால் போதும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக குறிப்பாணையை மனுவுடன் இணைக்க வேண்டும்.

' தத்கல் முற ை' யின் கீழ் விண்ணப்பிக்க, 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். சென்னை கல்லூரி சாலையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகம், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரியில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பங்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் 12ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அப்போதே தேர்வு மையத்தை குறிப்பிட்டு ஹால் டிக்கெட் வழங்கப்படும் எ‌ன்ற ு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments