Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறன் மேம்பாட்டுக் கல்விச் சட்டம் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்: கபில் சிபல்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010 (09:30 IST)
பள்ளிப் படிப்பை முடித்த, பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்ட மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க வகை செய்யும் திறன் மேம்பாட்டுக் கல்வி சட்ட வரைவு ( Vocational Education bill) விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

மும்பையில் ராம்ராவ அடிக் நினைவு சொற்பொழிவு ஆற்றிய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், “திறன் மேம்பாட்டுக் கல்விச் சட்ட வரைவை வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்வோம ்” என்று கூறியுள்ளார்.

கல்வித் திட்டத்தை சீர்திருத்தும் பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என்று கூறிய கபில் சிபல், கல்வியை வெளிப்படையானதாகவும், ஊழலிற்கு அப்பாற்பட்டதாகவும், உண்மையான ஜனநாயகத் தன்மைகளை பிரதிபலிக்கும் அமைப்பாகவும் மற்றத் தேவையான சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.

கல்வித் தீர்ப்பாயம், தேர்வுக் குற்றங்கள் தடுப்பு ஆகியன சில சட்ட வரைவுகள் என்றும் அமைச்சர் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments