Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக 18 ஒன்றியங்களில் மாதிரி பள்ளி

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2009 (13:32 IST)
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நிகரான தரத்திலான 18 மாதிரிப் பள்ளிகள் தமிழகத்தில் தருமபுர ி, சேலம ், ஈரோடு ஆகிய பின்தங்கிய மாவட்டங்களில் முதற்கட்டமாக உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.3 கோடி நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது.

தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்சா அபியான் ஆர்.எம்.எஸ்.ஏ) கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கி ய, தாழ்த்தப்பட் ட, பழங்குடியி ன, சிறுபான்மையின மாணவிகளை கல்வியில் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியா க, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்ட ஒன்றியங்களில் ‘மாதிரி பள்ளிகள ் ’ உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பள்ளிகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நிகராக அமைய உள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நல்லூர ், பண்ருட்ட ி; தருமபுரியில் கெலமங்கலம ், பென்னகரம ், சோழகிர ி; ஈரோட்டில் அம்மாப்பேட்ட ை, மூலனூர ், நம்பியூர ்; கரூரில் கடவூர ்; நாமக்கல்லில் கொல்லிமல ை; சேலத்தில் எடப்பாட ி, கடையாம்பட்ட ி, கொங்கணாபுரம ், எஸ்.புதூர ்; விழுப்புரத்தில் ரிஷிவந்தியம ், தியாகதுர்கம ், திருக்கோயிலூர் ஆகிய 18 ஒன்றியங்களில் ‘மாதிரி பள்ளிகள ் ’ கட்டப்பட உள்ளன.

இந்த ‘மாதிரி பள்ள ி ’களில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியும் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.3 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதேபோல் பின்தங்கிய மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிகள் கட்டப்பட உள்ளதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் அறிவிப்புக்கு பின் உறுதியானது 4 முனை போட்டி.. வெற்றி யாருக்கு?

பொன்முடி வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடுவேன்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

திமுக - பாஜகதான் எதிரி? அவர்களோடு என்றும் கூட்டணி கிடையாது! - கறாராக போட்டு உடைத்த விஜய்!

அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? பொறுத்திருந்து பாருங்கள்: நயினார் நாகேந்திரன்

Show comments