Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க தடை

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:35 IST)
தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்றக் ‌கிளை தடை‌வி‌தி‌த்து‌ள்ளது.

குமரி மாவட்டம ், குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரியின் தலைவர ், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையில் தாக்கல் செய்த மனு‌வி‌ல ், எங்கள் கல்லூரி அரசு உதவி பெறாத மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனம். இதில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்பட ி, 50 இடங்களை அரசு ஒதுக்கீடாகவும ், மீதமுள்ள 50 இடங்களை கல்லூரி நிர்வாக ஒதுக்கீடாகவும் நிரப்பப்படுகின்றன. கடந்த 2008-09 கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வான 50 மாணவர்களில் 43 மாணவர்கள் சேர்ந்தனர். மாணவர்கள் சேராததால ், மீதியுள்ள 7 இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பினோம்.

இந்நிலையில ், 2009-2010 கல்வி ஆண்டில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை 43 ஆகக் குறைத்தும ், அரசு ஒதுக்கீட்டு இடங்களை 57ஆக உயர்த்தியும ், இந்திய மருத்துவக் கவுன்சில் ஜூலை 23ஆம் தேதி உத்தரவிட்டது. எனவ ே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்று கூறப்பட்டிருந்தது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதி எம்.சத்தியநாராயணன ், மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு 4 வாரம் தடைவிதித்து உத்தரவிட்டார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments