சென்னை பல்கலையில் மாணவிகள் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய தடையில்லை

Webdunia
புதன், 21 அக்டோபர் 2009 (13:44 IST)
சென்னைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஜீன்ஸ், டீ-ஷர்ட் உள்ளிட்ட நவீன ஆடைகளை அணிந்து வருவதற்கு தடையில்லை என பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஜீன்ஸ ், டி-ஷர்ட் அணிந்து வகுப்புக்கு செல்வதில் தவறில்லை என்பது எனது கருத்து. சில பேராசிரியர்கள ், துணைவேந்தர்கள் கூட ஜீன்ஸ் அணிகிறார்கள்.

டி-ஷர்ட்டுகள் 100, 150 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால் சில உடைகளை எடுத்து அதனை தைத்து உடுத்துவதற்கு அதிகம் செல்வாகும். எனவே, ஜீன்ஸ ், டி-ஷர்ட் அணிந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு நான் தடைவிதிக்க மாட்டேன். தேவையில்லாத வாசகங்கள் இடம் பெறும் டி-சர்ட்டுகள் அணிவதை தவிர்த்த ு, வாசகம் இடம் பெறாத டி-ஷர்ட்டுகள் அணியலாம்.

தமிழக பாரம்பரிய கலாசாரம் சிறப்பு வாய்ந்தது. அதற்கு எந்த குறைபாடும் ஏற்படாத விதத்தில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் ஆடை அணிய வேண்டும்.

செல்போனுக்கும் தடையில்லை: செல்போன் இன்று அத்தியாவசியமான பொருளாக இருக்கிறது. எனவ ே, மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் செல்போன் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வகுப்பறையில் அதை பயன்படுத்தக்கூடாது என துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

Show comments