Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் கல்விக் கண்காட்சி நிறைவு

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2010 (18:08 IST)
சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட 2 நாள் கல்விக் கண்காட்சி இன்று நிறைவடைந்தது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சிக்கு வந்திருந்தனர்.

WD
நாட்டின் முக்கிய நகரங்களில் பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 4, 5ஆம் தேதிகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் கண்காட்சி நடந்தது.

இதில் இங்கிலாந்து கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 58 பிரதிநிதிகள் உட்பட 90க்கும் அதிகமான அயல்நாட்டுக் கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களின் கல்லூரியில் வழங்கப்படும் கல்வி முற ை, படிப்புகள ், உதவித்தொக ை, விசா பெறும் முறை ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர்.

இங்கிலாந்தில் இளங்கலை, முதுகலை படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் ஏராளமான உதவித் தொகை குறித்த விளக்கம், விசா பெறுவது, இங்கிலாந்தில் எம்.பி.ஏ. ஆகிய தலைப்புகளில் பிப்ரவரி 4, 5ஆம் தேதிகளில் தனித்தனியே கருத்தரங்குகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட வலைதளங்களில் தேவையான தகவல்களைப் பெறலாம்.

britishcouncil.or g. in

britishcouncil.org/india-scholarships.htm

educationuk-in.org

ucas.com

ukba.homeoffice.gov.uk/workingintheuk
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய கடற்படையின் துணை தலைவர் படுகொலை.. உக்ரைன் எல்லையில் இருந்த பிணம்..!

மிரட்டி பணம் பறிப்​பது தான் நிகிதாவின் வேலை: நிகிதாவின் முன்னாள் கணவர் திடுக்கிடும் தகவல்..!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் கைது.. கைதானவர்களின் மனைவிகளும் கைது..!

சிகரெட்டால் சூடு.. மூளையில் ரத்தக்கசிவு.. அஜித்குமார் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்..!

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

Show comments