Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌த் ‌தி‌‌ட்ட‌த்‌தி‌ற்கு ஒ‌த்துழை‌ப்பு அ‌ளி‌க்க முதல்வர் வே‌ண்டுகோ‌ள்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2009 (16:32 IST)
“தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே முறையில், சீராக வழங்கிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும ் ” எ‌ன்று முதல்வ‌ர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இ‌‌ன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்‌பி‌ல ், சமச்சீர் திட்டத்தின்படி தமிழகத்திலுள்ள மாநிலக் கல்வி வாரியம ், மெட்ரிக்குலேஷன் கல்வி வாரியம ், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம ், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய 4 கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்த ு, 4 வாரியங்களிலும் உள்ள சிறப்பம்சங்களைத் தொகுத்து பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட உள்ளது.

இதுவரை 4 தனித்தனி வாரியங்களின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்துக்கும ், பொது பாடத்திட்டம ், பொது பாடநூல்கள ், பொதுத்தேர்வு முறை ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பொதுப்பாடத் திட்டத்தின்கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு அவற்றை அடுத்த கல்வி ஆண்டு முதல் 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கும ், அதற்கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஒருபிரிவினர் சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து குழப்பம் ஏற்படுத்துவது சரியான அணுகுமுறை ஆகாது. சமச்சீர் கல்வி இதுவரை நடைமுறையில் இருக்கும் ஒரு வாரியத்தின் பாடத்திட்டத்தை மற்ற வாரியங்களின் பள்ளிகள் மீது திணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல.

ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட்ட ு, அதில் உள்ள சிறப்பம்சங்களைத் தேர்வு செய்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்குவதே சமச்சீர் கல்வியின் நோக்கம்.

பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் எழுதும்போது அனுபவம் வாய்ந்த அனைத்து தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். பாடத்திட்டம், பாடநூல்கள் ஒளிவு மறைவின்றி பொது விவாதங்கள் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும். இந்த சமச்சீர் கல்வித் திட்டத்திற்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

Show comments