Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களு‌க்கு நியமன ஆணை வழங்க கோரிய மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2009 (12:23 IST)
குரூ‌ப்-1 தே‌ர்‌வி‌ல் தே‌ர்‌ச்‌சி பெ‌ற்றவ‌‌ர்களு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணை வழ‌ங்க‌க் கோ‌ரி தா‌‌க்க‌ல் செ‌ய்த மனுவை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாம ி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில ், தமிழகத்தில் துணை ஆ‌ட்‌சிய‌ர ், டி.எஸ்.பி ஆகிய பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டு 172 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.

இது சட்ட விரோதமானது. முக்கிய பதவிகள் காலியாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியமன உத்தரவு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூறியிருந்தார்.

இ‌ந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.கோகல ே, நீதிபதி முருகேசன் ஆகியோர் விசாரித்தனர். அ‌ப்போது அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராக ி, ‘குரூப்-1 தேர்வை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நியமன உத்தரவு வழங்க தடை பெற்றுள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் நியமன உத்தரவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவ ே, மனுவை ‌நிராக‌ரி‌க்க வேண்டும ் ’ என்றார்.

இதை நீதிபதிகள் ஏற்று‌க் கொ‌ண்ட ு, டிராபிக் ராமசாமியின் மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை! மத்திய அரசு அனுமதி! - கட்டணம் எவ்வளவு?

மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.. வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு..!

அமெரிக்கா விதித்த 50% வரி.. டிரம்புக்கு பிரேசில் அதிபர் கொடுத்த பதிலடி..!

பிறந்து 38 நாள் ஆன குழந்தை.. குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு வாரமாக மாறாமல் இருக்கும் வெள்ளி விலை..!

Show comments