கட்டாயக்கல்வி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2009 (12:34 IST)
நாடு முழுவதும் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டமசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

உடல் ஊனமுற்றோருக்கு 18 வயது வரை இலவச கல்வியை இந்த மசோதா உறுதி செய்கிறது. அதே போல் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு செய்யவும் இந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கட்டாய நன்கொடை பெறுவதையும ், குழந்தைகள், பெற்றோருக்கு நேர்முகத் தேர்வு நடத்துவதற்கும் இந்த மசோதா தடைவிதிக்கிறது.

இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், உடல் ஊனமுற்றோருக்காக சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்படும். எல்லா வகையான பள்ளிகளிலும் உடல் ஊனமுற்றோருக்கு கல்வி அளிப்பதற்கு அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. பெற்றோர்களை சிறைக்கு அனுப்ப ி, குழந்தைகளை ஆதரவற்றோர் நிலைக்குத் தள்ள அரசு விரும்பவில்லை என்றார்.

இந்த மசோதா ஏற்கெனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

Show comments