Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஏஎஸ்: மனித நேய மாணவர்கள் 148 பேர் தேர்ச்சிபெற்றனர்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2010 (19:37 IST)
FILE
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப்பணிக்கான தேர்வுகளின் முதல் நிலைத் தேர்வில், சைதை சா.துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 148 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு நடந்த தேர்வில் இம்மையத்தில் பயிற்சிபெற்ற 760 மாணவ, மாணவியரில், மற்ற பல தேர்வுகளை எழுதச் சென்றுவிட்டவர்கள் தவிர, 480 பேர் முதல் நிலைத் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் தேர்ச்சி பெற்றுள்ள 148 பேருக்கும் ஐந்து மாத காலத்திற்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

இவர்கள் தலைநகர் டெல்லி சென்று நேர்முகத் தேர்வில் பங்கு பெற இரயில் பயணச் சீட்டு, தங்குமிட வசதி, உணவு, உடை ஆகிய அனைத்தும் மையத்தின் சார்பாக இலவசமாகவே வழங்கப்படுகிறது.

முதல் நிலைத் தேர்வில் எமது மையத்தில் பயிற்சி பெறாமல், சுயமாக பயிற்சி பெற்ற மாணவர்கள், முதன்மைத் தேர்விற்கு பயிற்சி பெறவும் விண்ணப்பிக்கலாம் என்று அதன் இயக்குனர் மா.வாவூசி கூறியுள்ளார்.
விண்ணப்பிற்பதற்கான முகவர ி:

சைதை துரைசாமியின் மனித நேயம் ஐஏஎஸ ் /ஐபிஎஸ் இலவசப் பயிற்சி மையம் (மனித நேய அறக்கட்டளை)
எண் 28, முதலாவது முதன்மைச் சாலை,
சிஐடி நகர், சென்னை 600035.
தொலைபேசி 2435 8373 கைபேசி 99406 70110

மின்னஞ்சல் manidhaneyam@yahoo.com

இணையத் தளம் www.saidais.com
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

Show comments