Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் டாப் 15 கல்வி கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள்

Webdunia
சனி, 10 நவம்பர் 2012 (14:09 IST)
உலகின் மிக குறைந்த விலை ஆகாஷ் என்ற டேப்லெட்டை கண்டுபிடித்த சுனீத் சிங் டுளி மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர் ஆனந்த் அகர்வால் ஆகிய இரண்டு இந்திய கல்வியாளர்களின் பெயர்களும் உலகின் டாப் 15 கல்வி கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் டாப் 15 கல்வி கண்டுபிடிப்பாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

எதிர்கால கல்விக்கான ஆசிரியர்களின் பங் களிப்ப ு மற்றும் அவர்களின் அடுத்த தலைமுறைக்காக அளிக்கும் பயிற்சி ஆகியவற்றை மெருகேற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்விக்கான பங்கீடுகளுக்கு பெருந்தொகை அளிக்கும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான டேட்டாவிண்டின் தலைமை நிர்வாகியான சுனீத் சிங் டுளி, உலகின் மிக விலை மளிவான விலையிலான நவீன டேப்லெட்டை வெளியிட்டார். ஆகாஷ் என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்டேப்லெட்டை இந்திய மாணவர்களுக்காக வழங்க அவர் முன்னால் மனிதவள அமைச்ச்ரான கபில் சிபலுக்கும் வழிமுறைந்தார்.

இவரை அடுத்து ஆன்லைன் கல்வி துறையை வழிவகுத்த இந்திய தொழில்நுட்ப பேராசிரியர் ஆனந்த் அகர்வாலின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் எம்ஐடி பேராசியர் ஆவார்.

தனது பங்களிப்பினை டெக்ஸாஸில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்க்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்க்கும் வழங்கியுள்ளார். இதன்மூலம் ஆன்லை எனப்படும் இணைய வழி கல்வி முறை உலக மாணவர்களிடையே பிரபலமாகியுள்ளது குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த கம்யூனிஸ கிறுக்கனிடமிருந்து நியூயார்க்கை காப்பாற்றுவேன்! - இந்திய வம்சாவளி மேயருக்கு எதிராக ட்ரம்ப் சூளுரை!

கடைசியாக ஒருமுறை.. மகனுக்கு பெண் வேடம்! குடும்பமே தற்கொலை! - என்ன நடந்தது?

திருப்பதி கோவில் அருகே பயங்கர தீ விபத்து. லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!

Show comments