Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தில் கோளாறு: பி.எட். தேர்வு முடிவு தெரியாததால் மாணவர்கள் அவதி

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2009 (11:54 IST)
கல்வியியல் பல்கலைக்கழகம் குறிப்பிட்ட இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பி.எட். தேர்வு முடிவுகளை அறிய முடியாமல் மாணவர்கள் நேற்று அவதிக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் 555 உள்ளது. இந்தக் கல்லூரிகளில் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சார்பில ், இளநிலை கல்வியியல் (பி.எட்.) பருவத்தேர்வு கடந்த மே, ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதியிருந்தனர்.

இதன் முடிவுகள் tnteu.i n என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்தது. ஆனால் இணையதளக் கோளாறு காரணமாக தேர்வு முடிவை மாணவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் அவதிக்கு உள்ளாயினர்.

இதுபற்றி கல்வியியல் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோத ு, “இணையதள பிரச்னையால் தேர்வு முடிவை மாணவர்களால் உடனே பார்த்து அறிய முடியவில்லை. 555 கல்வியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள ை, விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைத்து விட்டோம். எனவே, மாணவர்கள் அந்தந்த கல்லூரிகள் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம ் ” என்று தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments