ஆகஸ்ட் 3இல் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2009 (13:16 IST)
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 3ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

எனினும், நிர்வாகத் தரப்பு இடங்களை சுயநிதிக் கல்லூரிகள் நிரப்ப வேண்டியுள்ளதால ், கல்லூரிகள் திறக்கும் தேதியை சுயநிதி கல்லூரி நிர்வாகங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

அப்போது சென்ன ை, செங்கல்பட்ட ு, வேலூர ், திருச்ச ி, மதுர ை, சேலம ், கோவை உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள ஆயிரத்து 398 MBB S இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு வரும் 3ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்த ி, ஈரோடு பெருந்துறை ஐ.ஆர்.டி. உட்பட 4 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 283 அரசு ஒதுக்கீட்டு MBB S இடங்களுக்கும் முதற்கட்ட கலந்தாய்வின் போது மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், நிர்வாகத் தரப்பு இடங்கள் நிரப்பப்பட உள்ளதால் முதலாம் ஆண்டு வகுப்புகள் திறக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

Show comments