Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயல்நாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: வயலார் ரவி

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (10:48 IST)
அயல்நாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், அயல்நாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு இந்தியாவில் உயர்கல்வி அளிக்கவும ், உயர்கல்விக்கான இடமாக இந்தியாவை மேம்படுத்தவும் 2006-07ம் கல்வியாண்டில் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் பொறியியல ், தொழில்நுட்பம ், கல ை, வணிகம ், மேலாண்ம ை, விடுதி நிர்வாகம ், விவசாயம ், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளநிலை படிப்புகளுக்க ு, அதிகபட்சமாக ஆண்டுதோறும் 4,500 அமெரிக்க டாலர்கள் வரை சுமார் 100 வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் கணிசமான அளவில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளின் அயல்நாடு வாழ் இந்தியர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எட்சில் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் அயல்நாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கடந்த 2006-07ஆம் ஆண்டில் அயல்நாடு வாழ் இந்திய மாணவர்கள் 60 பேரும ், கடந்த 2007-08ஆம் ஆண்டில் அயல்நாடு வாழ் இந்திய மாணவர்கள் 79 பேரும ், கடந்த 2008-09ஆம் ஆண்டில் அயல்நாடு வாழ் இந்திய மாணவர்கள் 67 பேரும் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர் என வயலார் ரவி தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

Show comments