Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச்-1-பி விசா: 20,000 பேர் விண்ணப்பிக்கலாம்

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (13:24 IST)
அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான ‘ஹெச்-1-ப ி ’ விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இன்னும் 20,000 விசாக்கள் காலியாக உள்ளன.

தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் கணினி தொடர்பான பணிகளை மேற்கொள்ள விரும்பும் அயல்நாட்டு வல்லுனர்கள் அமெரிக்கா செல்ல ஹெச்-1-பி விசா பெற வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் 65,000 விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

நடப்பாண்டுக்கு முன்பு வரை உலகளவில் ஹெச்-1-பி விசாவுக்கு விண்ணப்பிப்பதில் கடும் போட்டி நிலவியது. நிர்ணயிக்கப்பட்ட விசா எண்ணிக்கைக்கு மேலாக விண்ணப்பங்கள் குவிந்தது.

ஆனால், உலகளவில் பொருளாதாரச் சரிவு மற்றும் ஐ.டி. துறை வீழ்ச்சி காரணமாக அமெரிக்கா செல்ல விரும்பும் ஐ.டி. வல்லுனர்களின் எண்ணிக்கையும் சரியத் துவங்கியது. இதன் காரணமாக இந்தாண்டு ஹெச்-1-பி விசா கோரி இதுவரை 45,000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மையம் தெரிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments