Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதியை மீறி புதிய பாட வகுப்புகளுக்கு அனுமதி : கோவை அண்ணா பல்கலைக்கழக‌த்து‌க்கு தா‌க்‌கீது

Webdunia
புதன், 3 ஜூன் 2009 (10:18 IST)
விதிமுறைகளை மீறி பல பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளில், புதிய பாட வகுப்புகளை நடத்த அனுமதித்ததாக தொடர‌‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் ப‌தி‌ல ் அ‌ளி‌‌க்கு‌ம்பட ி கோவை அண்ணா பல்கலைக்கழ க‌ த்து‌க்க ு சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌ ப உ‌த்தர‌வி‌ட்‌டுள்ளத ு.

சென்னையை சேர்ந்த இந்திய மக்கள் மன்றத் தலைவர் வராகி பொதுநலன் கருதி சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ல ் தாக்கல் செய்து‌ள்ள மனுவில ், கோவை அண்ணா பல்கலைக்கழகம் பல பொ‌றி‌யி‌யல ் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தருவதில் விதிமுறைகளை மீறி நடந்து வருகிறத ு.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறைகளை மீறி பல பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளுக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.எஸ். வகுப்புகளை நடத்த அனுமதி தந்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்தது விதிமுறைகளை மீறிய செயலாகும்.

மேலும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 3 ஆண்டு பி.டெக். வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் வழிமுறை இல்லை. ஆனால் இதையும் மீறி பல பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.டெக். நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கி வருகிறார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் இல்லாமல், கோவை அண்ணா பல்கலைக்கழகம் ஆன்-லைன் மூலம் பட்டப்படிப்பை தொடங்கியுள்ளது. இதற்கும் அங்கீகாரம் கிடையாது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.

ஆகவே, பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை நிபுணர் குழுவை நியமித்து இந்த முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை மீதி தொடங்கப்பட்ட வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும் எ‌ன்ற ு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.எஸ்.ராமநாதன், என்.கிருபாகரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அ‌ப்போத ு, இதுபற்றி பதில் தருமாறு கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தா‌க்‌‌கீத ு அனுப்ப உ‌த்தர‌வி‌ட் ட நீதிபதிக‌ள ், வழ‌க்க ு ‌ விசாரணைய ை ஜூ‌ன ் 15 ஆ‌ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments